நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் நாளை  சுல்தான் பள்ளிவாசலில் தமிழ் முஸ்லிம் ஜமாஅத் ஏற்பாடு செய்யும் இரத்த தான முகாம் 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் நாளை 28.01.24 காலை 9மணி முதல் மாலை 3மணி வரை தமிழ் முஸ்லிம் ஜமாஅத் ஏற்பாடு செய்யும் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் ஜமாஅத், மஸ்ஜித் சுல்தான், சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் (ரெட் கிராஸ்) ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இரத்தம் கொடுப்பவரின் உடலில் இயற்கையாக புதிய ரத்தம் உற்பத்தியாகும். 100 முறை ரத்த தானம் செய்தாலும் அவர்கள் உடலில் எந்தவிதமான பிரச்சினைகளும் இன்றி நலமுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

மற்றவர்களுக்குத் தேவைப்படும் போது நாம் செய்யும் உதவிக்கு தானம் என்று பெயர். தானங்களில் எத்தனையோ வகை உள்ளன. பசித்தவர்களுக்கு உணவு வழங்குவது அன்னதானம், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளிப்பது ஞானதானம், ஏழைகளுக்கு ஆடைகள் கொடுப்பது ஆடை தானம். இதேபோல பல தானங்கள் உள்ளன.

இவற்றில் சிறந்த தானமாக ரத்த தானம் கருதப்படுகிறது. உடலில் எத்தனையோ உறுப்புகள் இருந்தாலும் நாம் உயிர் வாழ வேண்டும் என்றால் மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய 5 உறுப்புகள் மிக முக்கியமானவை. இதையும் விட ஒன்று முக்கியம் என்றால் அது ரத்தம். முக்கியமான 5 உறுப்புகள் மட்டுமல்லாமல் அனைத்து உறுப்புகளும் இயங்க வேண்டுமானால் அதற்கு ரத்தம் இன்றியமையாதது. ரத்தம் நமது உடலில் உள்ள திரவ உறுப்பு ஆகும். எனவே பொது மக்கள் ஆர்வத்தோடு வந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
 
சிங்கப்பூர் சுல்தான் மஸ்ஜித், 3 மஸ்கட் ஸ்திரிட்டில் உள்ள மல்டிபர்பஸ் ஹாலில் ரத்த தான முகாம் நடைபெறும்.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset