நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் O வகை ரத்தம் தட்டுப்பாடு:  தானம் செய்ய முன்வருமாறு வேண்டுகோள்  

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் O வகை ரத்த இருப்பு குறைவாக இருப்பதாகவும் நன்கொடை வழங்கும்படியும் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கமும் சுகாதார அறிவியல் ஆணையமும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து O வகை ரத்தத்தைத் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது.

O வகை ரத்தம் அதிகம் பயன்படுத்தப்படுவதால் அதன் இருப்பு கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவசரமான சூழல்களில் நோயாளிகளின் ரத்த வகை தெரியாதபோது O வகை ரத்தமே பயன்படுத்தப்படுகிறது.

O வகை ரத்த இருப்பு தொடர்ந்து குறைந்தால் அறுவைச் சிகிச்சைகளையும் உயிர்காக்க ரத்தம் செலுத்தப்படுவதையும் ஒத்திவைக்க வேண்டியிருக்கலாம்.

O+, O- ரத்த வகைகொண்ட 16 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டோர் தானம் செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அவர்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். குறைந்தது 45 கிலோகிராம் எடை கொண்டிருக்க வேண்டும்.

ரத்த தானத்திற்குத் தகுதி பெறுவோர் குறித்த மேல் விவரங்களுக்கு: www.hsa.gov.sg/donor_criteria

ஆதாரம்: மீடியா கோர்ப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset