நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் தைப்பூசத் திருவிழாவிற்கு கொட்டும் மழையில் திரண்ட பக்தர்கள் 

சிங்கப்பூர்: 

சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மழைக்கு இடையிலும் பக்தர்கள் பெரிய அளவில் திரண்டுள்ளனர்.

இன்று காலை 8.45 மணியளவில் சிங்கப்பூரில் பலத்த மழை பொழிய தொடங்கியது.

மழையைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நேர்த்திக்கடனைச் செலுத்த பொறுமையுடன் வரிசையில் காத்திருந்தனர்.

ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் இருந்து கிளமென்சியு அவன்யூ (Clemenceau Avenue) வரை பக்தர்கள் வரிசைபிடித்து நின்றிருந்தனர். 

அலகுக் காவடிகளுடனும் பால் குடங்களுடனும் பக்தர்கள் தொடர்ந்து கோயிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

நள்ளிரவிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 5500 பால்குடங்கள் செலுத்தப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்தது.

இது இன்று முழுக்க தொடரும் என்பதால் பக்தர்கள் பொறுமையாகவும் அமைதியான முறையிலும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகிறார்கள். 

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவரும் தைப்பூச விழாவில் கலந்துகொண்டு வருகின்றார்கள். 

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset