நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீன ஆய்வுக்கப்பலுக்கு மாலத்தீவு அனுமதி: இந்தியா அதிர்ச்சி 

மாலி: 

சீன ஆய்வுக் கப்பலை நிறுத்த மாலத்தீவு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்பட்டு சீனாவுடன் மாலத்தீவு நெருக்கமான உறவை மாலத்தீவு மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை இந்தியாவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அண்மையில் சீனாவுக்கு மாலத்தீவு அதிபர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், சுழற்சி முறையில் பணியாளர்களைப் பணியமர்த்தவும், சரக்குகளை நிரப்பவும் சியாங் யாங் ஹோங் 3 என்ற சீன கப்பலை மாலத்தீவில் நிறுத்த அனுமதி கோரப்பட்டது. 

சீன அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, அந்தக் கப்பலை மாலத்தீவில் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அந்த ஆய்வுக் கப்பல் மாலத்தீவு கடற்பகுதியில் எந்த ஆய்விலும் ஈடுபடாது என்று மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது.

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தினர் மார்ச்  15க்குள் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர்  முஹம்மது மூயிஸ்  வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset