நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பள்ளிவாசல்களைத் தாக்கத் திட்டமிட்ட சிங்கப்பூர் மாணவர் தடுப்புக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார்

சிங்கப்பூர்:

முஸ்லிம்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த "விரிவான ஏற்பாடுகளையும் திட்டங்களையும்" செய்த சிங்கப்பூர் மாணவர் தடுப்புக்காவலை விட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாய் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு இன்று (ஜனவரி 24) தெரிவித்துள்ளது.

மறுவாழ்வுத் திட்டத்தின்கீழ் அவர் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டதாகப் பாதுகாப்புப் பிரிவு கூறியது.

2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு வயது 16.

நியூசிலந்தின் கிரைஸ்ட்சர்ச் (Christchurch) தாக்குதலின் 2ஆம் ஆண்டு நினைவுநாளில் (15 மார்ச் 2020) உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள 2 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த அந்த இளையர் திட்டமிட்டார்.

தனது வீட்டுக்கு அருகில் இருந்த Assyafaah பள்ளிவாசலிலும் Yusof Ishak பள்ளிவாசலிலும் தாக்குதல் மேற்கொள்ள எண்ணினார்.

கிறிஸ்துவச் சமயத்தைச் சேர்ந்த அந்த இந்திய இளையர் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வால் ஈர்க்கப்பட்டிருந்தார்.

3 ஆண்டுகள் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

"மறுவாழ்வுத் திட்டத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது", "சமூகத்திற்கு அவரால் இனி ஆபத்து இல்லை" என்று முடிவுசெய்யப்பட்ட பிறகே அவர் விடுவிக்கப்பட்டதாய் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு குறிப்பிட்டது.

அவர் விடுவிக்கப்பட்டாலும் அவர் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

பயங்கரவாதக் குழுக்களோடு அல்லது தனிமனிதரோடு அவர் தொடர்பு கொண்டிருக்கக் கூடாது. அதோடு அனுமதியின்றி அவர் வெளிநாட்டுக்குப் பயணம் செய்யக்கூடாது போன்றவை அவருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளாகும்.

அவற்றைப் பின்பற்றத் தவறினால் அவர் மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்தது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset