நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பெண் கழிவறையைப் பயன்படுத்துவதைக் காணொலியில் பதிவு செய்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணியாளர் கைது

சியாட்டல்:

பெண் பயணி கழிப்பிடத்தைப் பயன்படுத்தும்போது ரகசியமாகக் காணொலி எடுத்த American Airlines விமானச் சிப்பந்தி  கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்ற ஆண்டு (2023) செப்டம்பர் மாதம் அந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அந்தச் சிப்பந்தி பணியில் இருந்து விலக்கப்பட்டதாக விமானச் சேவை நிறுவனம் கூறியது.

14 வயதுப் பெண் விமானக் கழிவறையைப் பயன்படுத்தியபோது 37 வயது எஸ்டெஸ் கார்டர் தாம்சன் III (Estes Carter Thompson), அதைக் காணொலியில் பதிவு செய்ய முயன்றதாக நம்பப்படுகிறது.

அந்தப் பெண் கழிப்பிடத்தைப் பயன்படுத்தச் சென்றபோது அதை யாரோ பயன்படுத்துவதை அறிந்தார்.

தாம்சன் அவரை மற்றொரு கழிவறைக்கு அழைத்துச் சென்றார்.

பெண் விமான கழிப்பிடத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு தாம் கைக் கழுவவேண்டும் என்றார் தாம்சன்.

கழிப்பிட இருக்கை உடைந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இருக்கையின்கீழ் சிவப்பு நிற ஒட்டுவில்லையில் சாதனங்கள் பழுதடைந்துள்ளதைக் குறிக்கும் சொற்கள் எழுதப்பட்டிருப்பதை அந்தப் பெண் கண்டார்.

ஒட்டுவில்லைகளுக்குக் கீழ் தாம்சனின் iPhone மறைந்திருந்ததை அவர் கவனித்தார்.

அதைக் கைத்தொலைபேசியில் படம்பிடித்துத் தனது பெற்றொரிடம் காட்டினார்.

பெண்ணின் தந்தை தாம்சனிடம் பேச முயன்றபோது அவர் கழிப்பிடத்தில் தன்னைப் பூட்டிக்கொண்டதாகக் கூறப்பட்டது.
விளம்பரம்

தாம்சன் வேறு 4 இளம் பெண்களையும் அதேபோல் காணொலியில் பதிவு செய்ததாகக் காவல்துறை நம்புகிறது.

ஆதாரம் : AP

தொடர்புடைய செய்திகள்

+ - reset