நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

2 நாள்களுக்கு பிறகு ஈரானை ஏவுகணை வீசி தாக்கியது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்:

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2 நாள்களுக்கு பிறகு பாகிஸ்தான் வியாழக்கிழமை ஏவுகணை வீசி தாக்கியது.

முன்னதாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, அந்த நாட்டுக்கு தனது தூதரை பாகிஸ்தான் திரும்ப பெற்றுள்ளது.

பாகிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் சன்னி பிரிவு ஜெய்ஷ் அல் அதில் பயங்கரவாத அமைப்பின் 2 நிலைகள் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்த வான்வழி தாக்குதலில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்; சிறுமிகள் 3 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தான் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதன் மூலம் நாட்டின் இறையாண்மை, சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நா. சாசன விதிகளை ஈரான் மீறியுள்ளது என்று பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் அல்அதில் பயங்கரவாதக் குழுவின் எல்லை கடந்த பயங்கரவாத செயல்பாடுகளை தடுக்குமாறு பாகிஸ்தான் அரசிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது; ஆனால், ஈரானுக்கு எதிரான அந்த பயங்கரவாதக் குழுவின் செயல்பாடுகள் தொடர்ந்ததால் தாக்குதல் நடத்தப்பட்டது' என்று ஈரான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் அண்மையில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பிறகு, இராக், சிரியாவிலும் இதேபோல் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈரானை சகோதர நாடு என்று குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான் அவர்களிடம் இருந்து வந்த அச்சுறுத்தலுக்கு தக்க பதிலடி அளிக்கப்பட்டு பயங்கரவாத அமைப்பின் குழுக்கள் அழிக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ளது.

"பாகிஸ்தானில் பயங்கரவாதக் குழுவின் நிலைகளை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல், அந்த இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்று ஈரானுக்கு ஆதரவாக இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset