நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

27 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஈஸ்வரனுக்கு பதிலாக சீ ஹொங் டாட் இனி போக்குவரத்து அமைச்சர்: சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் 

சிங்கப்பூர்:

தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) இனி முழுப் போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

27 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும்  ஈஸ்வரன் போக்குவரத்து அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகி இருக்கிறார். 

சீ நிதிக்கான இரண்டாம் அமைச்சராகவும் இனி பொறுப்பு வகிப்பார்.

அவர் ஏற்கெனவே நிதிக்கான மூத்தத் துணையமைச்சராகவும் பீஷான்- தோ பாயோ குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்படுகிறார்.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சரும்  வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மக்கள் செயல் கட்சி உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து எஸ். ஈஸ்வரன் விலகினார். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஈஸ்வரன் மீது சென்ற ஆண்டு (2023) ஜூலை மாதம் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு  விசாரணை நடத்தத் தொடங்கியது 

ஈஸ்வரன் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, 

இனி நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) அந்தப் பொறுப்பை ஏற்பார் என்று அலுவலகம் சொன்னது.

தற்போது  எஸ். ஈஸ்வரன் அனைத்து பொறுப்புகளிலிருந்தும்  விடுவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் பொறுப்பில் பெறப்பட்ட சம்பளமும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பெறப்பட்ட ஊக்கத்தொகையும் அவர் திருப்பி அளிக்க இருக்கிறார். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset