நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து அமைச்சர், எம்.பி பதவிகளிலிருந்து எஸ். ஈஸ்வரன் விலகினார் 

சிங்கப்பூர்: 

சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து அமைச்சராக இருந்த எஸ். ஈஸ்வரன் தமது அமைச்சர் பொறுப்பிலிருந்தும் எம்.பி பதவியிலிருந்தும் PAP கட்சியிலிருந்தும் விலகியுள்ளார். 

ஊழல் புரிந்த குற்றத்திற்காக எஸ். ஈஸ்வரனுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வந்த நிலையில் அமைச்சர் பொறுப்பிலிருந்து எஸ்.ஈஸ்வரன் விலகும் கடிதத்தை பிரதமர் லீ சியேன் லூங்கிடம் வழங்கிவிட்டார் என்று சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது. 

இந்நிலையில்,  சீ ஹோங் தாத் புதிய போக்குவரத்து துறை அமைச்சராகவும் இரண்டாவது நிதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் சற்று முன் குறிப்பிட்டது. 

ஈஸ்வரன் மீது வியாழக்கிழமை காலை நீதிமன்றத்தில் 27 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு ஊழல், நீதிக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் 24 குற்றவியல் சட்டத்தின் கீழ் பொது ஊழியராக மதிப்புமிக்க பொருளைப் பெற்றமை ஆகிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார். 

எஸ். ஈஸ்வரனுக்கு எதிரான விசாரணையை லஞ்ச ஊழல் விசாரணை பிரிவு முடித்துவிட்டது. விவகாரத்தை அரசாங்க தலைமைச் சட்ட அலுவலகம் மறு ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, ஊழல் நடவடிக்கைகாக எஸ். ஈஸ்வரன் கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஊழல் குற்ற விசாரணை துறையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். மேலும், எஸ்.ஈஸ்வரன் விடுப்பில் செல்ல வேண்டும் என்று பிரதமர் லீ சியேன் லுங் முன்னமே அறிவுறுத்தியிருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset