நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை தைப்பூச ரத ஊர்வலத்தில் 3 விவகாரங்களுக்கு போலிஸ் தடை: டான்ஸ்ரீ நடராஜா

கோலாலம்பூர்:

பத்துமலை தைப்பூச ரத ஊர்வலத்தின் போது 3 விவகாரங்களுக்கு தடை விதிக்க போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா இதனை உறுதிப்படுத்தினார்.

பத்துமலை தைப்பூச விழா, வெள்ளி ரத ஊர்வலம் குறித்து கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ அலாவூதின் அப்துல் மஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர், டாங் வாங்கி போலீஸ் தலைவர் உட்பட போலீஸ் உயர் அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

May be an image of 5 people

தைப்பூச வெள்ளி ரத ஊர்வலத்தின் போது பக்தர்களுக்கு ஒரு சில தடைகளை போலீஸ் விதித்துள்ளது.

ரத ஊர்வலத்தின் போது பட்டாசு, வாண வேடிக்கை வெடிக்க வேண்டாம். மோட்டார் சைக்கிள்களில் ஆர்ப்பரித்து சத்தமிட்டு முருக்கி செல்லக் கூடாது. 

குறிப்பாக மது அருந்துவது, விற்பது போன்ற நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆகவே பக்தர்கள் இந்த விவகாரங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

இந்த சந்திப்புக் கூட்டத்தில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ சிவக்குமாரும் கலந்து கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset