நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விவேக் ராமசாமி விலகல் 

வாஷிங்டன்: 

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ரிபப்ளிகன் கட்சியின் வேட்பாளரான விவேக் ராமசாமி விலகியுள்ளார். மேலும், அமெரிக்கா அதிபர் வேட்பாளர் டொனால் டிரம்புக்கு அவர் ஆதரவு அளிப்பதாக தமது எக்ஸ் தளத்தில் விவேக் அறிவித்துள்ளார். 

ரிபப்ளிகன் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் டிரம்பிற்குச் செல்வாக்கு அதிகமாகவே உள்ளது. முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால் விவேக் ராமசாமி அவருக்கு ஆதரவு அளிப்பதாக சொன்னார். 

இந்நிலையில் டிரம்ப்பிற்கு தாம் மனமார்ந்த வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டார். அமெரிக்காவை முன்னேற்ற பாதையில் கொண்டு வருவதற்கு அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம் என்று விவேக் குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset