நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செயற்கை நுண்ணறிவு தொடர்பான புரிதலை நாட்டு மக்கள் கொண்டிருக்க வேண்டும்: ரஃபிசி ரம்லி

கோலாலம்பூர்: 

AI UNTUK RAKYAT நிகழ்ச்சியின் வாயிலாக மலேசியர்கள் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான புரிதல்கள், மதிநுட்ப தகவல்கள் ஆகியவை பெற வழிவகுக்கும் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி கூறினார். 

AI தொழில்நுட்பத்தின் அடிப்படை கூறுகளை மக்கள் புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த AI தொழில்நுட்பத்தால் பல்வேறு வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படும் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

நாட்டை அடுத்த கட்டத்திற்கு அதாவது, இலக்கவியல் பொருளாதாரத்தை முன்னெடுக்க இது வழிவகுக்கும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

2030ஆம் ஆண்டுக்குள் மலேசியா இலக்கவியல் பொருளாதாரத்துறையில் மேம்பாடு அடைந்த நாடாக மாறுவதற்கு AI தொழில்நுட்பம் பெரும் உறுதுணையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். 

AI UNTUK RAKYAT நிகழ்ச்சியைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். 

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset