நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஞ்சள் பொறித்த கோழி 20 ரிங்கிட்: லங்காவியில் சர்ச்சை

கோலாலம்பூர்: 

லங்காவியில் மஞ்சள் பொறித்த கோழிக்கு (ஆயாம் கூஞ்சிட்)  20 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்பட்ட சம்பவம் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

லங்காவி பந்தாய் சினாங்கில் உள்ள உணவகத்தில் அப்பொறித்த கோழிக்கு 20 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்பட்டது.

கட்டணத்தை செலுத்திய வாடிக்கையாளர் இந்த விவகாரம் தொடர்பில் தனது அதிருப்தியை சமுக வலைத் தளத்தில் வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சு எச்சரிக்கை கடிதம் வழங்கியது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் உணவக உரிமையாளர் ஜூல்பான் விளக்கம் தந்துள்ளார்.

உணவத்தில் விற்கப்படும் அனைத்து உணவுகளின் விலையும் விலைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலையை பார்த்து தான் ஆர்டர் செய்த அந்த வாடிக்கையாளர் பணம் செலுத்தும் போது பிரச்சினையாக்கி உள்ளார்.

குறிப்பாக 160 கிராம் கோழி, காய்கறிகள், கேரட், சேலட், பயிற்றங்காய், ஹாலண்ட் வெங்காயம் ஆகியவற்றை வைத்து தான் இந்த உணவு வழங்கப்பட்டது.

ஆக இந்த விலை ஏற்புடையது என்று அவர் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset