நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராசிரியர் முனைவர் பி.இராமசாமி ஓர் இனவாதி: துன் டாக்டர் மகாதீர் முஹம்மது சாடல்

கோலாலம்பூர்: 

பேராசிரியர் முனைவர் பி. இராமசாமி ஓர் இனவாதி என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மத் கடுமையாக சாடியுள்ளார். 

பேராசிரியர் முனைவர் பி.இராமசாமி பல இனங்கள் கொண்ட கட்சியான ஜனநாயக செயல் கட்சியிலிருந்து விலகி ஓர் இந்திய  எழுச்சி இயக்கத்தை தொடங்கியுள்ளார். தம்மை இராமசாமி நாட்டின் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைச் சீர்குலைக்க செய்பவன் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை என்று துன் டாக்டர் மகாதீர் கூறியதாக தி வைப்ஸ் ஆங்கில செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டது. 

இந்நிலையில், நடப்பு மடானி அரசாங்கத்தில் ஓர் இந்திய பாரம்பரியத்தைக் கொண்ட  அமைச்சரை கூட நியமிக்கப்படவில்லை. இந்திய அமைச்சர்கள் அமைச்சரவையில் நியமிக்கப்படாதது குறித்து இதில் தவறு எங்கே உள்ளது என்று லங்காவி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மகாதீர் கேள்வி எழுப்பினார். 

இந்தியர்களுக்காக மட்டும் குரல் கொடுக்கும் பேராசிரியர் இராமசாமியும் ஓர் இனவாதிதான். காரணம், மலேசியாவின் நலனுக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை மாறாக இந்திய சமூகத்திற்கும் குரல் கொடுக்கிறார் என்று மகாதீர் சாடினார். 

முன்னதாக, துன் மகாதீரின் கூற்றுக்கு பினாங்கு மாநில முன்னாள் இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி பதிலடி கொடுத்தார். அதில், துன் மகாதீர் தான் நாட்டின் ஒற்றுமைக்கும் பெரும் சுமையாக உள்ளதாகவும் இன நல்லிணக்கத்திற்கு பாடுபடாத அரசியல்வாதியுமாக உள்ளார் என்று இராமசாமி தெரிவித்திருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset