நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்திய ராணுவத்தினர் வெளியேற மாலத்தீவு கெடு

மாலி:

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை மார்ச் 15க்குள் வெளியேறுமாறு அந்நாட்டு அதிபர் முஹம்மது மூயிஸ் இந்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

சீன பயணத்தை முடித்து கொண்டு சனிக்கிழமை மாலத்தீவுக்கு திரும்பிய பின்பு அவர் ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு தெரிவித்தார்.

சீன நாட்டின் ஆதரவாளராகக் கருதப்படும் மூயில், அதிபராக பதவியேற்றவுடன் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

எனினும், அங்கு இந்திய ராணுவம் தொடர்வதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியா உயர்நிலைக் குழு அமைத்தது.

இந்தக் குழுவின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பிறகு அதிபர் அலுவலக பொதுக் கொள்கைச் செயலர் அப்துல்லா நசீம் கூறுகையில், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை மார்ச் 15க்குள் திரும்பப் பெறுமாறு அதிபர் மூயிஸ் இந்திய அரசிடம் முறைப்படி கோரியுள்ளார் என்று தெரிவித்தார்.  

எனினும், மாலத்தீவில் இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து இருப்பதற்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனையை இருநாட்டு உயர்நிலைக் குழு மேற்கொண்டது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset