நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அயோத்தி ராமர் கோயில் திறப்பை புறக்கணித்த சங்கராச்சாரியார்கள்

புது டெல்லி: 

அயோத்தி ராமர் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாமல் அரசியல் ஆதாயத்துக்காகத் திறக்கப்பட உள்ளது என்று சங்கராச்சாரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டையை பிரதமரே அனைத்தையும் செய்யும்போது, அங்கு தர்மாச்சாரியார் என்று கூறி அவர்கள் விழாவை புறக்கணித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத ராமர் கோயிலை ஜன.22ஆம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார்.

இதுதொடர்பாக ஒடிஸா மாநிலம் புரியில் உள்ள புர்வாம்நய கோவர்தன பீடத்தின் 145வது ஜகத்குரு சங்கராச்சாரியார் நிஷ்சலானந்த சரஸ்வதி கூறுகையில்,
ஜன.22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை பூஜையை பிரதமர் செய்ய உள்ளதால், நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமாட்டேன்.

கோயிலில் பிரதமரே அனைத்தையும் செய்யும்போது, அங்கு தர்மாச்சாரியார் (மதகுரு) செய்வதற்கு என்ன பணி இருக்கும் என்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கட்டி முடிக்காமல் நுழைய முடியாது: உத்தரகண்டில் உள்ள ஜோதிஷ் பீடத்தின் 1,008வது சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதியும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புறக்கணித்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset