நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது கூகுள்

சான் பிரான்ஸிஸ்கோ: 

செலவுகளைக் குறைக்க நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் கூகுள் முடிவு எடுத்துள்ளது.

அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 6 சதவீதமாகும் அதாவது 12,000 பேரை படிப்படியாக பணிநீக்கம் செய்யவதாக கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனம் கடந்தாண்டு அறிவித்தது.

தற்போது மேலும்  பலர் மீது பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்வதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

முக்கிய துறைகளில் முதலீட்டை அதிகரிக்கவும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் நிறுவனம் முற்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

கடந்தாண்டு மெட்டா நிறுவனம் 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. செயற்கை நுண்ணறிவு துறையில் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் அமேசான் நிறுவனம் அதன் பிரைம் வீடியோவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset