நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூர் - மலேசியா இடையில் கடப்பிதழ் இல்லாத குடிநுழைவு முறைக்கு ஆலோசனை

ஜொகூர்பாரு:

சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான தரைவழிப் பயணங்களில் இனி கடப்பிதழ் தேவையில்லா குடிநுழைவு முறை நடப்புக்கு வரக்கூடும்.

ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத் திட்டத்தின் கீழ், 

கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி குடிநுழைவு நடைமுறைகளை விரைவாகப் பூர்த்தி செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவது இதற்குக் காரணம்.

இத்திட்டத்தின் கீழ், சிங்கப்பூர் வர்த்தகங்கள் ஜோகூரில் கடை திறக்க உதவும் வர்த்தக, முதலீட்டுச் சேவை நிலையத்தை ஜொகூரில் அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், நிலச் சோதனைச் சாவடிகளில் சரக்குகளை அனுமதிக்கும் நடைமுறையை மின்னிலக்கப்படுத்துதல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.

சிறப்புப் பொருளியல் வட்டாரம் தொடர்பில் பணியாற்றும் வேளையில், முதலீட்டாளர் கருத்தரங்கை இணைந்து ஏற்பாடு செய்யவும் இரு நாடுகளும் திட்டமிடுகின்றன. 

சிறப்புப் பொருளியல் வட்டாரம் குறித்து வர்த்தகங்களிடம் கருத்துத் திரட்ட இது உதவும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.

சிறப்புப் பொருளியல் வட்டாரம் தொடர்பான புரிந்துணர்வுக் குறிப்பில் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங்கும் மலேசியப் பொருளியல் அமைச்சர் முகமது ரபிஸி ரம்லியும் கையெழுத்திட்டனர். 

பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமும் கையெழுத்து நிகழ்ச்சியைப் பார்வையிட்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset