நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட மலேசியரை இங்கு கொண்டு வர திட்டமில்லை: அய்யுப் கான் மைதீன் உறுதி 

கோலாலம்பூர்: 

போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட மலேசியரை லாவோசிலிருந்து மலேசியாவிற்குக் கொண்டு வருவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்று துணை ஐ.ஜி.பி அய்யுப் கான் மைதீன் பிச்சை கூறினார். 

பேராக் மாநிலத்தைச் சேர்ந்த அந்நபர் தாய்லாந்து நாட்டு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கான முடிவினை எடுப்பது என்பது சம்பந்தப்பட்ட நாட்டின் அதிகாரிகளின் முடிவாகும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இந்நிலையில், பிடிப்பட்ட ஆடவர் தாய்லாந்து நாட்டு பெண்ணை மணந்துள்ளார். இதனால் பிடிப்பட்ட அவ்வாடவர் அந்நாட்டிலேயே தண்டனையை அனுபவிக்கட்டும் என்று அவர்சொன்னார். 

முன்னதாக, கடந்த டிசம்பர் 29ஆம் தேதி மலேசியரான போதைப்பொருள் கடத்தல் மன்னன் என்று சொல்லப்படும் அவர் லாவோஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் குற்றத்திற்காக அவர் தாய்லாந்து நீதிமன்றத்தில் குற்றத்தை எதிர்நோக்கியுள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset