நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் பிரதமரும் அவரின் உதவியாளரும்  எம்.ஏ.சி.சி விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்: அஸாம் பாக்கி உறுதிப்படுத்தினார். 

கோலாலம்பூர்: 

நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவரும் அவரின் உதவியாளரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். இந்த தகவலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் தான்ஶ்ரீ அஸாம் பாக்கி உறுதிப்படுத்தினார். 

சம்பந்தப்பட்ட முன்னாள் பிரதமர் கூடிய விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

கடந்த வாரம்,  700 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய 
அரசாங்க நடவடிக்கைகளைப் பிரபலப்படுத்துவதற்கும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் அப்போதைய இரு அரசாங்கங்களும் ஊழல் நடவடிக்கை புரிந்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தியது. 

உண்மையில் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் எவ்வளவு பணம் செலவானது என்பதை அப்போதைய முதல் நிலை தலைவர்களாக இருந்தவர்கள் தான் கூற வேண்டும். இதனை எம்.ஏ.சிசி விசாரணை செய்யும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். 

மேலும், இந்த விவகாரம் தொடர்பான அப்போதைய அரசாங்கங்களிடமிருந்து நிதி பெற்ற நிறுவனங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset