நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகமான எம்பிகள் பிரதமரை ஆதரிப்பதால் தேசியக் கூட்டணியும் சனுசியும் கவலைப்படுகின்றார் பாவம்: மாஃபூஸ் ஒமர்

கோலாலம்பூர்:

அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாரை ஆதரிப்பதால் தேசியக் கூட்டணியின் தலைவர்களும் கெடா மந்திரி பெசாரும் முஹம்மது சனுசி கவலைப்படுகின்றனர் பாவம்.

கெடா மாநில நம்பிக்கை கூட்டணி தலைவர் மாஃபூஸ் ஓமர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கம் விரைவில் கவிழ்ந்து விடும் என்று கூறுவது நம்பிக்கை கூட்டணி தனது அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை ஆதரிப்பதைத் தடுக்கும் உத்தியின் ஒரு பகுதியாகும்.

புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்கட்சி எம்.பி.க்கள், அன்வாரை ஆதரிப்பதாக அறிவிப்பதற்கு முன், அடுத்த மாதம் மக்களவை அதன் கூட்டத்தை மீண்டும் தொடங்கும் வரை காத்திருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் சனுசியின் கூற்றுக்கள், அன்வாருக்கு ஆதரவான இத்தகைய அறிவிப்புகள், பல நீதிமன்ற வழக்குகள் குறித்த கவலைகள் குறித்து தேசிய கூட்டணியின் தலைமையின் கவலையை சுட்டிக் காட்டுவதாக அவர் கூறினார்.

சனுசியின் குற்றச்சாட்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை சேதப்படுத்தும்.

ஏனெனில், நாட்டில் அரசியல் நிலைத் தன்மை இல்லை என்று அவர்கள் உணரக்கூடும்.

இருப்பினும், மக்களவையில் பிரதமருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு இருப்பதால் நிலைமை மிகவும் நிலையானது என்று மாஃபூஸ் ஓமர்
கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset