நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசியக்  கிண்ண பங்கேற்கும் மலேசிய அணிக்கு 1 மில்லியன் ரிங்கிட் அன்பளிப்பு

கோலாலம்பூர்:

ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் மலேசிய அணிக்கு 1 மில்லியன் ரிங்கிட் அன்பளிப்பு கிடைக்கவுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டி கட்டாரில் நடைபெறவுள்ளது.

வரும் ஜனவரி 12ஆம் தேதி முதல் இக்கால்பந்துப் போட்டி அங்கு நடைபெறவுள்ளது.

மலேசிய அணியினர் கிட்டத்தட்ட 43 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டியில் விளையாடவுள்ளனர்.

இப்போட்டிக்கு தகுதி பெற்றதன் வாயிலாக மலேசிய அணியினர் 1 மில்லியன் வெள்ளியை அன்பளிப்பாக பெறவுள்ளனர்.

போட்டியில் பங்கேற்கும் 24 அணிகளும் இந்த தொகையை பெறுகின்றனர்.

ஆசியக் கிண்ணத்தை வென்றால் 23 மில்லியன் ரிங்கிட்டும் இரண்டாவது இடத்தை பிடித்தால் 14 மில்லியன் ரிங்கிட்டும் பரிசாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset