நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இம்ரான் கான் குற்றவாளியாக அறிவிப்பு

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை  அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானும், அவரது தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஃபவத் சவுதிரியும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜாவை தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக இருவர்மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் இம்ரான் கானும், ஃபவத் சவுதிரியும் குற்றவாளிகள் என புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

இம்ரான் கானும், ஃபவத் சவுதிரியும் ராவல்பிண்டியிலுள்ள அடிலாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இந்த தேர்தல் ஆணைய அவமதிப்பு வழக்கின் விசாரணை சிறைச்சாலை வளாகத்திலேயே நடைபெற்றது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset