நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய சூப்பர் லீக் போட்டியில் பங்கெடுக்க கிளாந்தான் எப் சி தகுதி பெறவில்லை 

கோலாலம்பூர்: 

2024-2025ஆம் தவணைக்கான மலேசிய சூப்பர் லீக் போட்டியில் பங்கெடுக்கும் தகுதியைக் கிளாந்தான் எப்சி அணி இழந்தது. கிளாந்தான் அணி தேசிய உரிமத்தைப் பெற தவறியதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இயங்கலை வாயிலாக நடைபெற்ற மலேசிய காற்பந்து லீக் சங்கத்தின் கூட்டத்தின் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நிதி கட்டமைப்பின் விதிமுறைகளில் கிளாந்தான் எப்சி முறையான அணுகுமுறை பின்பற்றாததால் கிளாந்தான் அணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எம்.எஃப்.எல் சங்கம் விளக்கம் அளித்தது. 

மலேசிய சூப்பர் லீக் போட்டியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட போதிலும் கிளாந்தான் அணி மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஜனவரி 8ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட அணி மேல்முறையீட்டை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

பெரும் நிதி நெருக்கடியில் இருக்கும் கிளாந்தான் அணி 2023ஆம் ஆண்டுக்கான மலேசிய சூப்பர் லீக் கிண்ண ஆட்டத்தில் மோசமான அடைவுநிலையைப் பதிவு செய்தது. 22 ஆட்டங்களில் கிளாந்தான் அணி படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset