நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் வருங்காலத்தில் எதிர்நோக்கவிருக்கும் அறைகூவல்களை ஒன்றாகச் சமாளிப்போம்: பிரதமர் லீ சியன் லூங்

சிங்கப்பூர்:

2024ஆம் ஆண்டுக்குள் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்குமாறு சிங்கப்பூர் பிரதமர் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) புத்தாண்டுச் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் பொருளியல் இந்த ஆண்டு 1.2 விழுக்காடு வளர்ச்சி கண்டு மந்தநிலையைத் தவிர்த்தது.

உலகின் மற்ற பகுதிகளில் சூழ்நிலை சாதகமாக இல்லை. அதனால் கவனத்துடன் செயல்படவேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துக்கூறினார்.

உக்ரேனில் போர் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை..

காஸாவில் சண்டை தொடர்கிறது..

அதன் தாக்கம் இங்கும் உணரப்படுகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் போன்ற விவகாரங்கள் உள்ளூரில் பிளவை ஏற்படுத்தக்கூடியவை.

அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ள அதற்கு மதிப்பளித்துச் சகிப்புத்தன்மையுடன் அணுகவேண்டும் என்றார் பிரதமர்.

2023ஐச் சவால்மிக்க ஒன்றாக மாற்றிய காரணங்களில் இந்தப் போரும் ஒன்று என்றார் அவர்.

மற்றொரு காரணம் உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினம்.

மந்தநிலையைத் தவிர்த்திருந்தாலும் குடும்பங்கள் விலைவாசி உயர்வை உணர்கின்றன.

சிங்கப்பூரில் ஜனவரி 1, 2024 பொருள்சேவை வரி 9 விழுக்காட்டுக்கு உயர்கிறது.

கூடுதலாக வசூலிக்கப்படும் வரி, சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் லீ கூறினார்.

தாக்கத்தைச் சமாளிக்கக் குடும்பங்களுக்கு உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் கைகொடுக்கும்.

2024இல் தொழில்நுட்ப வளர்ச்சி, வணிக உருமாற்றம், திறன் மேம்பாடு போன்ற அம்சங்கள் சிங்கப்பூருக்குச் சாதகமாக அமையும் என்றார் பிரதமர்.

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) வழிநடத்தும் அரசியல் தலைமைத்துவ மாற்றத்துக்கு முழு ஆதரவை வழங்குமாறும்  லீ சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார்.

நாடு வருங்காலத்தில் எதிர்நோக்கவிருக்கும் அறைகூவல்களை ஒன்றாகச் சமாளிக்க அது துணைபுரியும் என்றார் பிரதமர் லீ.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset