நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் மீண்டும் தோல்வி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் மீண்டும் தோல்வி கண்டனர்.

சிட்டி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் நோட்டிங்ஹாம் போரஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் நோட்டிங்ஹாம் போரஸ் அணியிடம் தோல்வி கண்டனர்.

பல முன்னணி ஆட்டக்காரர்கள் இருந்தும் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் அடுத்தடுத்து தோல்வி காண்பது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கிராவன் கோட்டஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அரசெனல் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியிடம் தோல்வி கண்டனர்.

மற்றொரு ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் ஏஎப்சி போர்னமௌத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset