நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனலை வீழ்த்தியது வெஸ்ட்ஹாம்

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்செனல் அணியினர் தோல்வி கண்டனர்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 0-2 என்ற கோல் கணைக்கில் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியிடம் தோல்வி கண்டனர்.

வெஸ்ட்ஹாம் அணியின் கோல்களை தோமஸ் சோவ்ட்ஜ், மாவ்ரோபானஸ் ஆகியோர் அடித்தனர்.

இதனைத் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அர்செனல் அணியின் முயற்சிக்கு வெஸ்ட்ஹாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் 2-4 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியிடம் தோல்வி கண்டனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset