நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரயில் நிலையங்களில் பிரதமர் படத்துடன் "செல்ஃபி : பல கோடி வீண்

பிஜப்பூர்:

ரயில் நிலையங்களில் பிரதமர் படத்துடன் செல்ஃபி பூத் அமைக்கப்பட்டு மக்களின் வரிப் பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

ரயில் நிலையங்களில் ஒன்றிய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பிரதமருடன் செல்ஃபி பூத் வைக்கப்பட்டுள்ளன.

சிறிய ரயில் நிலையங்களில் தலா ரூ.1.2 லட்சம் செலவிலும், பெரிய ரயில் நிலையங்களில் தலா ரூ.6.25 லட்சம் செலவிலும் இந்த "செல்ஃபி பூத்' வைக்க செலவிடப்பட்டதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.

PM selfie booths at railway stations brazen waste of taxpayers' money:  Kharge

இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடி அரசின் சுயவிளம்பர திட்டம் எல்லை இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. மக்களின் வரிப் பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்திலும், வறட்சியிலும் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுக்கிறது. ஆனால், இதுபோன்ற தேவையற்ற விஷயங்களில் பணத்தை செலவிட்டு வருகிறது. தனது தேர்தல் ஆதாயத்துக்காக மக்களின் வரிப் பணத்தை அரசு வீணாக்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset