நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய அணுஉலை: ரஷியாவுடன் இந்தியா ஒப்பந்தம்

மாஸ்கோ:

தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிர்கால அணுஉலைகள் அமைப்பதற்காக இந்தியா-ரஷியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்  ரஷியாவுக்கு 5 நாள் அரசு முறை பயணம் சென்றுள்ளார்.

ரஷிய துணை பிரதமர் டெனிஸ் மான்டுரோவை சந்தித்த அவர், அணுமின் நிலையம், மருந்துகள், மருந்தியல் பொருள்கள், மருத்துவக் கருவிகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

பின்னர் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய ஜெய்சங்கர், துணை பிரதமர் மான்டுரோவுடனான சந்திப்பின்போது கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கான எதிர்கால அணுஉலைகள் குறித்து முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

பாதுகாப்பு, அணுமின் உற்பத்தி, விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியாவின் சிறந்த கூட்டாளியாக  ரஷியா உள்ளது என்றார்.

ரஷிய தொழில்நுட்ப உதவியுடன் கட்டப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செயல்பட்டு வருகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset