நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இயக்குனர் கவுதம் மேனனுடன் டத்தோஶ்ரீ  ஜீ சந்திப்பு: புதிய படத்திற்கான ஒப்பந்தமா?

பெட்டாலிங் ஜெயா :

மலேசியத் தொழிலதிபரும் நடிகருமான டத்தோஶ்ரீ ஜி  என்று அழைக்கப்படும் ஞானராஜா இயக்குநர் கவுதம் மேனனைச் சென்னையில் சந்தித்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இச்சந்திப்பு குறித்த எந்த அறிவிப்புகளை தற்போது வெளியிடுவதற்கு தமக்கு அனுமதி இல்லையென்றும் இது குறித்த அறிவிப்புகளை இயக்குநர் கவுதம் மேனன் விரைவில் வெளியிடுவார் என்றும் அவர் அப் புகைப்படத்தின் கீழ் குறிப்பிட்டுள்ளார். 

அண்மையில் விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற மார்க் ஆண்டனி திரைப்படத்தில் டத்தோஶ்ரீ ஜி, கோல்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset