நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடைசி அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார் மொஹிதின்: பாஸ் கட்சி அமைச்சர்


கோலாலம்பூர்:

பிரதமர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் இன்று காலை நடைபெற்ற பெரிக்கத்தான் அரசாங்கத்தின் கடைசி அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி உள்ளார்.

இத் தகவலை தோட்டத்தொழில் அமைச்சர் டத்தோ கைருடின் அமான் ரசாலி தெரிவித்துள்ளார்.

பாஸ் கட்சி சார்பில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அவர், அமைச்சரவைக் கூட்டம் முடிந்துவிட்டது என்றும் இனி அனைத்தும் இறைவனின் கையில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பெரிக்கத்தான் நேசனல் அரசாங்கத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset