நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசா போரை நிறுத்த ஐ.நா. தீர்மானத்தை அமெரிக்கா ரத்து செய்தது

நியூயார்க்: 

காசாவில் போரை நிறுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்தது.

இத்தகைய தீர்மானத்தால் காசாவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதாலும் அதை ரத்து செய்ததாக அமெரிக்கா கூறியது.இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 17,487 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்;

அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள்.

இந்த போரை நிறுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்ற நான்கு முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

மால்டா நாட்டால் கொண்டுவரப்பட்ட அத்தகைய ஒரு தீர்மானம் மட்டுமே கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.

காசா போர் விபரீத கட்டத்தை அடைந்துள்ளதாகவும், இனியும் அங்கு போர் நீடித்தால் மிகப் பெரிய மனிதப் பேரழிவு ஏற்படும் என்றும் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் அறிவித்தார்.

மேலும், காசாவில் உடனடியாகப் போரை நிறுத்த மிகவும் அரிதாகப் பயன்படுத்தப்படும் ஐ.நா.வின் 99வது சட்டப் பிரிவை எடுத்தது.

காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவருவதை வலியுறுத்தும் வரைவுத் தீர்மானத்தை பாதுகாப்பு கவுன்சிலில் ஐக்கிய அரபு அமீரகம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.

15 உறுப்பினர்களைக் கொண்ட அந்த கவுன்சிலில் அந்த வரைவுத் தீர்மானத்துக்கு 13 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.  ஆனால், தனது சிறப்பு வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த வரைவுத் தீர்மானத்தை அமெரிக்கா ரத்து செய்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset