நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

புயல் எச்சரிக்கை: சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை

சென்னை: 

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை, மெரினா கடற்கரையின் இணைப்பு சாலையில் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள புயலுக்கு ‘மிக்ஜாம்’ என பெயரிடப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. 

இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே 5-ஆம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது.

மிக்ஜாம்’ புயல் கரையைக் கடக்கும்போது 110 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் படிப்படியாக மழை அதிகரித்து நாளை மாலை வரை கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த புயலானது நாளை மதியம் வட தமிழக கடற்கரையோரம் நகர்ந்து அதன் பிறகு ஆந்திர கடற்கரையை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை மூடப்பட்டு காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் வரை மெரினா கடற்கரையின் இணைப்பு சாலையில் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இன்று வார விடுமுறையை முன்னிட்டு கடற்கரையில் கூடிய மக்களை காவல்துறையினர் வெளியேற்றினர். 

இதைபோல் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset