
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தியாகத் திருநாள் அன்று தேசிய தடய அறிவியல் தேர்வா?' தேர்வு நாள் மாற்றப்பட வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்து
சென்னை:
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் (National Forensic Science University) இந்தியா முழுவதும் உள்ள தனது அனைத்து கல்வி நிலையங்களுக்கும் ஒருங்கிணைந்த இளங்கலை படிப்புகளுக்கான தேர்வை ஹஜ்ஜு பெருநாள் அன்று நடத்துவதாக அறிவித்துள்ளதை திரும்பப் பெறவேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிகளிலிருந்து மட்டும் 1800க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர்.
அதில் பல முஸ்லிம் மாணவ, மாணவிகளும் தமிழ்நாடு அரசின் நிதி உதவியின் கீழ் விண்ணப்பித்துள்ளனர்.
தியாகத் திருநாள் அன்று இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது முறையல்ல.
இந்த நுழைவுத் தேர்வை நடத்தும் National Forensic Science University, Gandhi Nagar, Gujarat (Nodel Authority) க்கு என்னுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு. தேர்வு தேதியை உடனடியாக மாற்ற வேண்டும் என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 28, 2025, 10:54 pm
திருச்சியில் கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் 30-ஆம் ஆண்டு சந்திப்பு
July 28, 2025, 10:10 am
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரசோழன் நினைவு நாணயத்தை இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டார்
July 27, 2025, 8:43 am
பிரதமர் மோடி தமிழக வருகை: பாதுகாப்புக் காரணங்களுக்காக திருச்சியில் கடைகளை அடைக்க கெடுபிடி
July 26, 2025, 2:35 pm
ஆர்டிபி கல்வி நிறுவனம் & அறக்கட்டளையின் வெள்ளிவிழா
July 25, 2025, 8:09 pm
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
July 25, 2025, 4:51 pm
வைகோ உட்பட 6 தமிழக எம்பிக்கள் ஓய்வு
July 24, 2025, 9:08 am