
செய்திகள் தமிழ் தொடர்புகள்
பாமக யாருடைய தனிச்சொத்தும் கிடையாது: தந்தையை சாடிய அன்புமணி
சென்னை:
"தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் நமது இலக்கு. எனவே நமக்குள் வேற்றுமைகள் எதுவும் இருக்கக்கூடாது. அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும்; பாமக யாருடைய தனிச்சொத்தும் கிடையாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தந்தையை சாடினார்.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அன்புமணி ராமதாஸ் இன்று பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "அனைத்து சொந்தங்களுக்கும் வணக்கம். பாமகவின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் புதுப்பித்தல் சம்மந்தமாக 5 மாவட்டத்தின் செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இங்கே கூடியுள்ளோம். இது 3 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு. நீங்கள் எல்லோரும் வேகமாக வேலை செய்து இப்பணியை முடிக்க வேண்டும்.
பாமக பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால் தலைவராக அங்கீகாரம் பெற்றது நான்தான். எப்போதும் நான் என்று சொல்லாமல் நாம் என்றே சொல்வேன். பாமக என்பது நானோ அல்லது வேறு யாருமோ கிடையாது, நீங்கள்தான் பாமக. நீங்கள் இல்லாமல் ஒன்றும் இல்லை. பாமக யாருடைய தனிச்சொத்தும் கிடையாது.
பாமக பொருளாளராக திலகபாமா தொடர்வார் என அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார். “பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமா அவர்கள் அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திலகபாமாவை பொருளாளர் பதவியிலிருந்து நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். புதிய பொருளாளராக சையது மன்சூர் என்பவரை நியமித்தும் அவர் அறிவித்தார்.
பாமகவில் கட்சி நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே கடந்த ஓராண்டாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. புதுச்சேரி அடுத்த பட்டானூரில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாமக இளைஞர் சங்க தலைவராக, தனது மகள்வழி பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். கூட்ட மேடையிலேயே இதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, சமீபத்தில் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கி, செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். இந்த நிலையில், கடந்த வாரங்களில் தைலாபுரத்தில் ராமதாஸ் கூட்டிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை.
இதன் தொடர்ச்சியாக, முன்னதாக, “அன்புமணிக்கு பக்குவம், தலைமை பண்பு இல்லை. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கியது நான் செய்த தவறு. கட்சி பிரச்சினை பற்றி பேசிய தாய் மீது பாட்டிலை வீசி எறிந்தார். வளர்த்த கடா என் மார்பில் பாய்ந்துவிட்டது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை நேற்று முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 5:28 pm
தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருக்கிறீர்களா?: எடப்பாடி பழனிசாமி சூசகமான பதில்
July 18, 2025, 4:32 pm
விஜய் தலைமையில் ஜூலை 20இல் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
July 18, 2025, 2:54 pm
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: சென்னை வானிலை மையம் தகவல்
July 14, 2025, 4:15 pm
அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: அமீத் ஷா கருத்தை மறுத்து இபிஎஸ்
July 14, 2025, 6:56 am
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm