செய்திகள் தமிழ் தொடர்புகள்
மன்னிப்பு கேட்டால் என்ன?: கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
புது டெல்லி:
தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது என்று கூறிய நடிகர் கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்க இயலாதா என்று கூறி கர்நாடக உயர்நீதின்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.
இந்த விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினரால் கமலஹாசனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் அந்த மாநிலத்தில் மட்டும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்படாது என்று கமல்ஹாசன் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தி்ன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில். தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கமல்ஹாசன் பேசினார்.
இதற்கு கன்னட அமைப்புகள் கமல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தின. ஆனால் கமல் மறுத்துவிட்டார்.
கர்நாடகத்தில் திரைப்படத்தை வெளியிட பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் கமல் வழக்கு தொடுத்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி என்.நாகபிரசன்னா, தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்று கூறுவதற்கு கமல் வரலாற்று ஆய்வாளரா?
எந்த மொழியும் வேறு மொழியில் இருந்து பிறக்கவில்லை. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பொரும்பாலான மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடாது.
கமல் ஒரு மன்னிப்பை கேட்டிருந்தால் பிரச்னை தீர்த்திருக்கும். ஆனால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் எழுதிய கடித்தில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை என்றார்.
கமல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்கத் தேவையில்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு நடத்தி முடிவு கிடைக்கும் வரை, கர்நாடகத்தில் திரைப்படத்தை வெளியிட வலியுறுத்தப்படாது என்றார்.
வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2026, 7:19 pm
தருமபுரி அருகே குன்று சரிந்து ரயில் மீது மோதிய பாறை: பயணிகள் உயிர் தப்பினர்
September 16, 2026, 7:27 pm
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது: 5 முனைப் போட்டி
September 16, 2026, 2:01 pm
அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் சாடல்
September 15, 2026, 10:11 pm
மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு
September 14, 2026, 11:38 pm
லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
September 14, 2026, 6:34 pm
சென்னை விமான நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.23 கோடியில் அமைக்கப்பட்ட பிக்கப் பாயின்ட் பிளாசா
September 13, 2026, 9:21 pm
மொரியஷியஸில் நடைபெறும் 13-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு
September 13, 2026, 6:16 pm
இடைத்தேர்தல்: அதிமுக பிரச்சாரக் குழுவில் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் அணிக்கு இடமில்லை
September 13, 2026, 6:08 pm
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக இடதுசாரிகள் அறிவித்தனர்
September 12, 2026, 10:57 pm
