
செய்திகள் இந்தியா
தேசிய கீதம் அவமதிப்பு: 11 பாஜக எம்எல்ஏக்கள் மீது வழக்கு
கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவை வளாகத்தில் தேசிய கீதம் பாடப்பட்டபோது பாஜகவின் 11 எம்எல்ஏக்கள் அவமதித்ததாக காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அம்பேத்கர் சிலைக்கு கீழே முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேற்கு வங்க மாவிலத்தை மத்திய அரசு பாரபட்சமாக நடத்துவதாகக் குற்றம்சாட்டி அதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தேசிய கீதம் பாடினர்.
அப்போது அங்கு திரண்டிருந்த பாஜக எம்எல்ஏக்கள் மாநில அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாகவும் மணி அடித்ததாகவும் கூறப்படுகிறது.
தேசிய கீதம் பாடப்பட்டபோது அதற்கு அவமரியாதை செய்ததாக 11 பாஜக எம்எல்ஏக்கள் மீது கொல்கத்தாவின் ஹரே தெரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியால் வட இந்தியாவில் விமான சேவைகள் பாதிப்பு
May 2, 2025, 5:01 pm