நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

 ஜே.டி.தி அணி ஸ்பெயின், போர்த்துகல் நாடுகளில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளது

ஜொகூர் பாரு: 

மலேசிய சூப்பர் லீக் கிண்ணத்தை பத்து முறை வென்ற ஜொகூர் டாருல் தக்சிம் அணி காற்பந்து முந்தைய பருவத்திற்கான பயிற்சியினை ஸ்பெயின், போர்த்துகல் ஆகிய நாட்டில் மேற்கொள்ளவுள்ளதாக ஜொகூர் அணி அறிவித்துள்ளது. 

ஜொகூர் அணியின் உரிமையாளர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் உடன் பொர்திமொனென்சே அணியின் உரிமையாளர் தியோடோரோஸ் பேச்சுவார்த்தை நடத்திய வேளையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று ஜொகூர் அணி தெரிவித்தது. 

2024/2025ஆம் ஆண்டுக்கான காற்பந்து பருவத்திற்கான முந்தைய பயிற்சிகளை ஜொகூர் அணி விளையாட்டாளர்கள் மேற்கொள்வார்கள். 

ஐரோப்பாவில் நடைபெறும் சில ஆட்டங்களிலும் ஜொகூர் அணி கலந்துக்கொண்டு தங்களின் ஆட்டத்திறனை மேம்படுத்திக்கொள்வார்கள் என்று ஜொகூர் அணி தமது சமூக ஊடகங்களில் தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset