நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணம் மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை

லண்டன்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் சமநிலை கண்டனர்.

ராம்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் கலாதாசாரே அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுடைடெட் அணியினர் 3 - 3 என்ற கோல் கணக்கில் கலாதாசாரே அணியுடன் சமநிலை கண்டனர்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் லென்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 6-0 என்ற கோல் கணக்கில் லென்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

சாந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் நபோலி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 4 - 2 என்ற கோல் கணக்கில் நபோலி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை ரோட்ரிகோ, பெலிங்ஹாம், ஜோஸ்லு, பாஷ் ஆகியோர் அடித்தனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset