நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் அபாரம்

லண்டன்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட்  அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் அஜர்பைஜானின் சபா எப்கே அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் சபா எப்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை மேதியஸ் குன்ஹா, புருனோ பெர்னாண்டஸ், பெஞ்சமின் செஸ்கோ, லிசாண்ட்ரோ மார்டினெஸ் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் பாயர்ன் முனிச் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் போடோ கிளிம்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிஎஸ்வி எண்ட்ஓவன் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ஷக்தார் டோனஸ்க் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset