நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அர்செனல் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்: நிர்வாகி அர்தெதா

லண்டன்:

செல்சிக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் பெற்ற நேர்த்தியான வெற்றியானது, கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்றதை விடத் தனது அணி இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதற்குச் சான்று.

அர்செனல் அணி நிர்வாகி மைக்கல் அர்தெதா இவ்வாறு வர்ணித்தார்.

ஆட்டத்தின் இரண்டாம் நிமிடத்தில் மோர்கன் ரோஜர்ஸ் செல்சியாவை முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, கை ஹாவர்ட்ஸ், கேப்டன் மார்ட்டின் ஓடெகார்ட் அடித்த கோல்கள், ஆர்சனல் அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்வதை உறுதி செய்தன.

புதிதாகக் களமிறங்கிய கோவென்ட்ரி சிட்டியை எளிதாக வீழ்த்தி, அஸ்டன் வில்லாவை 1-0 என்ற சொற்ப கோல் கணக்கில் வென்ற பிறகு, செல்சிக்கு எதிரான வெற்றியே அர்செனலின் இதுவரையிலான மிகவும் உறுதியான ஆட்டமாகக் கருதப்படுகிறது. 

ஏனெனில், அவர்கள் சொந்த மண்ணில் ஆடிய அணிக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்குடன் களமிறங்கினர்.

இது ஒரு நம்பமுடியாத ஆட்டம் என்று நான் நினைத்தேன். ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன்.

மேலும் இது ஒரு கடினமான தொடக்கமாக இருந்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset