நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

COP28 உச்சநிலை மாநாட்டில் அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்துகொள்கிறார். 

வாஷிங்டன்: 

உலக பருவநிலை மாற்றத்திற்கான COP28 உச்சநிலை மாநாட்டில் அமெரிக்கா நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்துக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த உச்சநிலை மாநாடு நாளை தொடங்கி டிசம்பர் 12ஆம் தேதி வரை ஐக்கிய அமீரக சிற்றரசில் நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் நடைபெறும் இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம் தொடர்பாக விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக BLOOMBERG செய்தி தளம் செய்தியை வெளியிட்டுள்ளது. 

மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்கா நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் அந்தோணி பிலின்கன் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த கூட்டத்தில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset