நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை 

சென்னை: 

ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் உருவாகவுள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை இன்று வெளியானது. கிருத்திகா உதயநிதி இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

படத்தின் முதன்மை கதாப்பாத்திரங்களில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

காதலிக்க நேரமில்லை படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிருத்திகா உதயநிதி இதற்கு முன் வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset