நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மலேசியக் கலைஞரும் பாடகருமான சிவக்குமார் ஜெயபாலன் இன்று காலமானார்

கோலாலம்பூர்: 

மலேசியக் கலைஞரும் பாடகருமான சிவக்குமார் ஜெயபாலன் இன்று திடீரென காலமானார்.

தொலைக்காட்சியில் நடைபெற்ற பாடல் திறன் போட்டியின் வாயிலாக பாடகராக முதன்முதலில் அறிமுகமானார். 

பின் அறிவிப்பாளராகவும், அதன் பின்னர் சினிமா துறையில் நடிகராகவும் வெற்றிகரமாக தனது பயணத்தைத் தொடங்கினார். 

பல மலேசிய தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இவர் தனது தனித்துவமான குரலாலும் திரைக்கதைகளில் உயிர் கொடுக்கும் நடிப்பின் மூலமும் மக்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். 

அவரின் திடீர் மறைவு, தமிழ் கலைத் துறையை மட்டுமல்லாது, அவரது சகக் கலைஞர்கள், நண்பர்கள், ரசிகர்கள் அனைவரையும் பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

நம்பிக்கை ஊடகம் சார்பாக, முதன்மை கலைஞர் சிவக்குமார் ஜெயபாலனின் மறைவுக்கு எங்களது மிகுந்த துயரமும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.கலைக்கான அவரின் அர்ப்பணிப்புகள் என்றும் நினைவிருக்கும்.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset