நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அடுத்த அதிரடி

வாஷிங்டன்:

அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து டிரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அவர் முக்கியமாக வரி விதிப்பதில் மும்முரமாக இருந்து வருகிறார்.

தற்போது அவரது கவனம் திரைப்படத்துறை மீது சென்றுள்ளது. இது குறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவில் திரைப்படத் துறை மிக வேகமாக அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மற்ற நாடுகள் நமது திரைப்படத் தயாரிப்பாளர்களையும், ஸ்டுடியோக்களையும் அமெரிக்காவிலிருந்து பிரிக்க அனைத்து வகையான சலுகைகளையும் வழங்குகின்றன.

இதனால் ஹாலிவுட் உட்பட திரைப்படத்துறை அமெரிக்காவிற்குள் பேரழிவிற்கு உள்ளாகி வருகின்றன. இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாகும்.

எனவே, ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset