நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நாட்டின் பிரபல கலைஞரும் பாடகருமான சிவக்குமார் ஜெயபாலன் காலமானார்: நாளை ஏப்ரல் 27ஆம் தேதி அன்னாரின் இறுதி சடங்கு நடைபெறுகிறது 

கோலாலம்பூர்: 

நாட்டின் பிரபல பாடகரும் நடிகருமான சிவக்குமார் ஜெயபாலன் இறந்த  செய்தி மலேசிய இந்திய கலையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

இந்நிலையில் அன்னாரின் இறுதி சடங்கு ஏப்ரல் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை மணி 11 முதல் மதியம் 1 மணி வரை  ஜாலான் பெண்டாஹாரா 10, தாமான் ஶ்ரீ செந்தோசா ஜெயாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிறகு, மதியம் 2 மணியளவில் கிள்ளான் சிம்பாங் லீமா மின்சுடலையில் உடல் தகனம் செய்யப்படும். 

முன்னதாக, தனது தாயாருடன் செராஸின் தாமான் டேசா பெட்டாலிங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பாடகர் சிவக்குமார் ஜெயபாலன் இறந்து கிடக்க காணப்பட்டார். 

செராஸ் மாவட்ட போலிஸ் தலைவர் ஐடில் போல்ஹாசன் இதனை தெரிவித்தார்.

48, 76 வயதுடைய இரண்டு பாதிக்கப்பட்டவர்களும் கட்டிடத்தின் 11ஆவது மாடியில் இருந்து விழுந்ததாக நம்பப்படுவதாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 

பிரபல பாடகரும் நடிகருமான சிவக்குமாரின் மரண செய்தி மலேசிய கலைத்துறையினர், ஊடகவியலாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset