நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மலேசியாவிலும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது : லோட்டஸ் 5 ஸ்டார் நிறுவனம் அறிவிப்பு

கோலாலம்பூர் :

மலேசியாவிலும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அதனை மலேசியாவில் வெளியிடும் லோட்டஸ் 5 ஸ்டார் நிறுவனம் தனது சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.

விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாதது குறித்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை இன்று காலை 10.30 மணிக்குள் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு பணத்தைக் கொடுக்காவிட்டால் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதனையடுத்து, திட்டமிட்டபடி இன்று ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை.

மேலும், படத்தைத் திரையிடுவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுவதாகவும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset