நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் ஓம்ஸ் அறவாரியமும் இணைந்து நடத்தும் தங்கப்பதக்க விருது விழா

கோலாலம்பூர் :

மலாயாப் பல்கலைக்கழகத்தின் 63-ஆவது பட்டமளிப்பு விழா நாளை தொடங்கி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்திய ஆய்வியல் துறையும் ஓம்ஸ் அறவாரியமும் இணைந்து இந்திய ஆய்வில் துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் பெறும் மாணவர்களௌக்குத் தங்கப்பதக்கம் வழங்கும் விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விருது விழா நவம்பர் 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி தொடங்கி மாலை 6 மணி வரை சமூக அறிவியல் கலைப்புலத்தின் டேவான் கூலியா ஏ-வில் நடைபெறவுள்ளது.

இம்முறை 18 மாணவர்கள் தங்கப்பதக்கம் பெறவுள்ளனர். அதில் 15 இளங்கலை மாணவர்களும், 1 முதுகலை மாணவரும் 2 முனைவர் பட்டம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர், ஓம்ஸ் பா.தியாகராஜனுடன் இணைந்து கோ.சாரங்கபாணி அறவாரியத்தின் தலைவர், சுகாதாரத் துறை முன்னாள் துணையமைச்சர் தான்ஶ்ரீ குமரன்,  சமூக அறிவியல் கலைப்புலத்தின் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் டேனி வோங் ட்ஸே கென், இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் முனைவர் சிவபாலன் கோவிந்தசாமி கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

2007-ஆம் ஆண்டு இந்திய ஆய்வியல் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் குமரன் சுப்ரமணியத்தின் முயற்சியில் முதன் முதலில் தங்கப்பதக்கம் வழங்கும் விருது விழா நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset