நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

மாற்றத்தை எதிர்கொண்டு அழையுங்கள்! - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்

"மாற்றம் ஒன்றே மாறாதது!" என்று சிலாகித்துக் கூறுவது உண்டு. இன்று நவீன தொழில்நுட்பம் மிகுந்த உலகில் மாற்றங்கள் அதிவிரைவில் நம்மைத் தாக்குவது மட்டுமல்லாமல், நம்மைக் கடந்து செல்கின்றன. 

அதை சமாளிக்கத் தெரிந்தவர்கள் சாதனையாளர்கள்.

எனவே, மாற்றங்களின் தடயங்களை அறிவதும் அவைகளை எதிர்கொள்வதும் வியாபாரத்தில் மட்டுமல்ல, சராசரி வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டிய வியூகம். இல்லாவிடில் நம் முன்னேற்றமும் இலாப இலக்குகளும் பெரும் பாதிப்பிற்குள்ளாகும்.

அதற்குத் தகுந்த ஒரு சில வியூகங்கள்.

ஒன்று : பயம்.
மாற்றம் என்ன என்று உள்வாங்காமல், அதன் தாக்கத்தைப் பற்றி பயப்படுவது. அதோடு பயத்தின் அடிப்படையில் மாற்றத்தை எதிர்ப்பது எண்ணித் துனிக கருமம் என்ற பயம் போக்கும் யுக்தியை மறந்துவிடுவது.

இரண்டு : பகுத்தாராய்வது
மாற்றம் பற்றி யோசிக்க வேண்டும். ஆனால், அதிகமாக யோசிப்பது, யோசித்துக் கொண்டே நேரத்தையும் காலத்தையும் வீணடிப்பது தவிர்க்கப்பட வேண்டும். அதற்காக அவசரக் குடுக்கையாக முடிவெடுப்பது கூடாது.

மூன்று : ஒத்துவராதாது.
தினசரி அலுவல்களிலும், தொழில் ஈடுபாடுகளிலும் நிறைய மாற்றங்கள் சம்பந்தமான விளைவுகள் வந்து கொண்டே இருக்கும். அனைத்துமே ஆகிவரும் என்று நம்பி, செயல்களைத் தொடரக் கூடாது. ஒரு செயல் பற்றிய பிடிப்பில் இருந்து இது ஒத்து வராது என்று உடனே விலக வேண்டும்.

நான்கு : ஊழியர்களின் சிந்தனை

மாற்றங்கள் நம்முடன் தொடர்பில் உள்ளவர்கள் மூலம்தான் பெரும்பாலும் வரும். அதில் முக்கியமானவர்கள் நம்மோடு இயங்கும் பணியாளர்கள் ஆவர். அவர்களின் ஆழ்மனதை அறிந்து அணுகினால் சிற்சில மாற்றங்களை கொண்டு வரலாம். அதற்காக, எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற முடிவு கூடாது.

பொதுவாக மாற்றம் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கக் கூடாது. மாற்றங்களின் தன்மைகளை உணர்ந்து, அவற்றை எதிர்கொண்டு வகைப்படுத்தி கையாள வேண்டும். அதுவே முன்னேற்றத்தை தரும். 

- டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்

தொடர்புடைய செய்திகள்

+ - reset