நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஒபாமாவின் முன்னாள் ஆலோசகர் நபிகள் நாயகத்தையும் குர்ஆனையும் இழித்து அவமதித்துள்ளார்: உலகளாவிய கண்டனங்கள் வலுக்கின்றன 

நியூயார்க்: 

அமெரிக்க முன்னாள் அதிபர் பாராக் ஒபாமாவின் முன்னாள் ஆலோசகர் ஸ்டூவர்ல் செல்டோவிட்ஸ் நபிகள் நாயகத்தையும் அல் குர்ஆனையும் இழிவு படுத்தி பேசியதோடு அவமதித்துள்ளார்.
அவரின் இழிசெயலுக்கு தற்போது உலகளாவிய நிலையில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

ஒபாமாவின் கீழ் தேசிய பாதுகாப்பு வாரியத்தின் தெற்காசிய இயக்குநரகத்தில் பணியாற்றிய செல்டோவிட்ஸ், காஸாவில் இஸ்ரேலிய தாக்குதலில் இறந்த 4,000 குழந்தைகளின் எண்ணிக்கை போதாது என்று வன்மமாக கூறினார்.

மேலும் நபிகள் நாயகத்தை பாலியல் கொடூரர் எனவும்  அவமதித்துள்ளார்.

முஹம்மதுவைப் போல் உங்கள் மகளை பாலியல் ரீதியாக நீங்கள்  துன்புறுத்த முடியுமா? இது உங்களின் புனிதரின் ஹதீஸ் நூலில் எழுதப்பட்டுள்ளது என்று செல்டோவிட்ஸ் கூறினார்.

அதே வேளையில் என்னை பொறுத்தவரை அல் குர்ஆன் கழிவறை காகிதம் எனவும் அவர் வர்ணித்துள்ளார்.

அவரின் இந்த பேச்சு உலகளாவிய அளவில் பெரும் அதிருப்தியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல் குழந்தைகளை கொன்றது போதாது என்று கூறிய அவரது பேச்சுக்குள் இருக்கும் குரூர குணத்தை அனைவரும் கண்டித்து வருகின்றனர். 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset